Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 ஜூன் (ஹி.ச)
கோவை மாவட்ட ஆவின் நுகர்வோர்கள் மற்றும் பால் முகவர்களின் வசதிக்காகவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் வரும் ஜூலை 1-ஆம் தேதி (01.07.2026) முதல் முக்கிய நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் அமலுக்கு வரவுள்ளதாக ஆவின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பால் உபபொருட்கள், 650 சில்லறை பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு தினசரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விநியோக வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கவும்,முகவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே தேவையை உறுதி செய்து பணம் செலுத்தவும் கடந்த மார்ச் மாதம் ‘செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பிரத்தியேக மொபைல் செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN