Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி வெளியான வீடியோ விவகாரத்தில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாணவரணி அறிவித்திருந்தது.
ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு விதிமுறைகளின்படி ஐந்து நாட்களுக்கு முன்பாக அனுமதி கோரி மனு அளிக்கப்படவில்லை என்பதால் அனுமதி வழங்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்தது.
இதற்கிடையில், ஆர்ப்பாட்டத்திற்காக ராஜரத்தினம் மைதானத்தில் மேடை மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் அவற்றை அகற்றி, ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அப்போது, திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P