இதற்குப் பெயர் பாசிசமா? இல்லை பாயாசமா? – போராட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக அரசை திமுக ஐடி விங் கடும் விமர்சனம்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) அமைச்சர் சரத்குமார் தொடர்பான விவகாரத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த முயன்ற திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும், அவர்களை காவல்துறையினர் கைது செய்ததையும் திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுத
Admk head office


Jn


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

அமைச்சர் சரத்குமார் தொடர்பான விவகாரத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த முயன்ற திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும், அவர்களை காவல்துறையினர் கைது செய்ததையும் திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,

பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ ஆதாரங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக கூறப்படும் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அறவழியில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைதியான ஜனநாயக போராட்டத்தைக் கூட எதிர்கொள்ள முடியாமல் போராட்டக்காரர்களைக் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும், அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உங்களின் ‘Thug Life’ அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினால் ஏன் போலீசுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்?” என்றும், “ஜனநாயக ரீதியான அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத கோழை அரசாங்கம் தமிழ்நாட்டை ஆள்வது வெட்கக்கேடு” என்றும் திமுக ஐடி விங் தனது பதிவில் விமர்சித்துள்ளது.

மேலும், அதிகார வெறியுடன் செயல்படும் அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக தமிழ்நாட்டு இளைஞர்களும் மக்களும் விரைவில் தக்க பதிலளிப்பார்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்துகள் திமுக ஐடி விங் சார்பில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில் இடம்பெற்றுள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ