Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 29 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான லிங்கசாமி மற்றும் சிங்கம் என்ற இருவரும் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரத்தில் சிலர் அருகில் கிடந்த கற்களை எடுத்து லிங்கசாமி மற்றும் சிங்கத்தின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஈத்தாமொழி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே இரவில் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈத்தாமொழி பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையால் தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b