சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.560 குறைந்தது
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் நேற்று இருந்த விலையை விட ரூ.560 குறைந்து ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் வ
தங்கம்


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் நேற்று இருந்த விலையை விட ரூ.560 குறைந்து ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.13,300-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்துக்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்கு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினசரி ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P