Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 29 ஜூன் (ஹி.ச)
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படும் விதம் குறித்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கு வருகை தந்த எம்.எல்.ஏ. பிரேமலதா, காலை உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு, உணவின் தரம், சுகாதாரம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முறை குறித்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடி, உணவு குறித்த அவர்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவை அருந்திய பிரேமலதா, பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.
பின்னர்,பிரேமலதா கூறுகையில்,
இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை மற்றும் கற்றல் ஆர்வம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏழை, எளிய குழந்தைகளின் பசியைப் போக்கி, கல்வியில் கவனம் செலுத்த வைக்கும் இந்தத் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் இந்தத் திட்டம், மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கி, இடைநிற்றலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.
எம்.எல்.ஏ.வின் இந்த திடீர் ஆய்வு, பள்ளி வளாகத்தில் கவனம் பெற்றது.
Hindusthan Samachar / vidya.b