மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்ற
mbbs


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று மதியம் 12 மணி முதல் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும் குறைந்தபட்சம் ஒரு வார காலம் வரை விண்ணப்பப் பதிவு நீடிக்கும் என்பதால் மாணவர்கள் அவசரப்படாமல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முன் மாணவர்கள் தங்களது நீட் அனுமதி அட்டை, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC), இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் தெளிவான ஸ்கேன் நகல்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களின் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற விவரங்கள் EMIS எண்ணின் மூலம் சரிபார்க்கப்படும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்கள் அல்லது EMIS எண் இல்லாதவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) சான்றொப்பமிட்ட ஆவணத்தை பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது முதலில் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புதிய கணக்கை உருவாக்க வேண்டும். பின்னர் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகவல்கள் மற்றும் நீட் தேர்வு தொடர்பான விவரங்களை துல்லியமாக பதிவுசெய்து, விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

அதனைத் தொடர்ந்து தேவையான சான்றிதழ்களை குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்து, இறுதிச் சமர்ப்பிப்பிற்கு முன் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளனவா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும்.

மேலும், எதிர்கால தேவைக்காக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அச்சு நகலாக வைத்துக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ