Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 ஜூன் (ஹி.ச.)
தமிழக அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவுக்கு,
Better luck with the next fiction… (அடுத்த கற்பனைக் கதைக்கு வாழ்த்துகள்) என்ற தலைப்பை இணைத்துள்ளார்.
இந்த வாசகம், இரு அமைச்சர்களுக்கும் இடையே மோதல் இருப்பதாக பரவிய தகவல்களை மறுக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சர் கீர்த்தனாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இரு அமைச்சர்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
எனினும், அமைச்சர்கள் இடையே மோதல் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கீர்த்தனாவின் இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை மறுக்கும் பதிலாகவே அரசியல் நோக்கர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam