Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 29 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை இன்று (ஜூன் 29 ஆம் தேதி) திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் முழுமையாக நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் வழக்கமான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரோப் காரின் இயந்திர பாகங்கள், கேபிள்கள், பிரேக் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இன்று தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தேவையான பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டாலும், மலைக்கோயிலுக்கு செல்லும் வின்ச் கார் சேவை மற்றும் படிப்பாதை வழியாக பக்தர்கள் வழக்கம்போல சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை முதல் ரோப் கார் சேவை வழக்கம்போல இயங்கும் எனவும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
பராமரிப்பு பணிகள் காரணமாக பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு கோயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், முன்கூட்டியே திட்டமிட்டு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், இந்த பராமரிப்பு பணி முக்கியத்துவம் பெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b