மனைவியின் நடத்தையில் சந்தேகம் - விஷம் கொடுத்த தந்தையால் 3 வயது மகன் பலி
திண்டுக்கல், 29 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன். இவருக்கு ரூபி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரபாகரன், அடிக்கடி குடும்பத
தற்கொலை


திண்டுக்கல், 29 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன்.

இவருக்கு ரூபி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரபாகரன், அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட பிரபாகரன், விஷம் வாங்கி வந்து குடும்பத்தினருக்கு பலவந்தமாகக் கொடுக்க முயன்றுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி ரூபியை அரிவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அச்சமடைந்த ரூபியும், மற்றொரு குழந்தையும் விஷம் குடிக்காமல் தப்பிய நிலையில், 3 வயது குழந்தை நாகராஜ் மட்டும் விஷத்தை உட்கொண்டான்.

சில நிமிடங்களில் குழந்தையின் வாயில் நுரை தள்ளியதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், குழந்தையை முதலில் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் பழனி அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றார்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பழனி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு மற்றும் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பழனி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam