Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 ஜூன் (ஹி.ச.)
ஆர். எஸ். மனோகர் (ராசிபுரம் சுப்ரமணியன் ஐயர் மனோகர்) என்பவர் தமிழ் நாடக உலகிலும், திரைப்படத் துறையிலும் முத்திரை பதித்த ஒரு பழம்பெரும் இந்திய நடிகர் ஆவார்.
தமிழ் நாடகக் கலைக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக
'நாடகக் காவலர்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்திய, நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி நாமக்கல்லில் பிறந்தார்.
இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா என்ற நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார்.
1950-ல் வெளியான 'ராஜாம்பாள்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்
இவர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார்.
இவர் நடித்த இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சுக்ராச்சாரியார் உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.
சினிமா கதாநாயகனாக அறிமுகமான இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இவர் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், இதயக்கனி உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொழில்நுட்பப் புரட்சி: அந்த காலத்திலேயே மேடையில் மின்னல், இடி, பிரம்மாண்ட அரண்மனை செட்டிங்குகள், மாயாஜாலக் காட்சிகள் போன்ற நவீன தொழில்நுட்ப உத்திகளைப் புகுத்தி நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்
சினிமா துறையை விட இவருக்கு நாடகங்கள் மீதுதான் அலாதி பிரியம் இருந்தது.
1954-ல் 'நேஷனல் தியேட்டர்ஸ்' என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார்.
நாடகக் காவலர்: 1970-ல் இவருக்கு இந்தத் பட்டம் வழங்கப்பட்டது.
நாடகச் செம்மல்: முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இவருக்கு இந்தத் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
இசைப்பேரறிஞர்: 1987-ல் சென்னை தமிழ் இசைச் சங்கம் இந்த விருதை வழங்கியது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
இவர் இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்களை பெற்றவர்.
தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் தன் வாழ்நாள் முழுவதும் நாடகக் கலைக்காகவே வாழ்ந்த ஆர். எஸ். மனோகர், ஜனவரி 10, 2006 அன்று தனது 81-வது வயதில் காலமானார்.
Hindusthan Samachar / Durai.J