Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இயக்குநர் பாக்யராஜுக்காக ஒரு அக்கறைமிக்க பிரியாவிடை நடைபெற வேண்டிய நேரத்தில், அமைதியான சூழலில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட வேண்டிய இடம் சர்க்கஸ் போல மாறியுள்ளது.
எங்கே, எப்போது நாம் இந்த நிலைக்கு மாறினோம்? என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு தெரிவித்துள்ள ஒழுங்குமுறைகளை மதித்து, மறைந்த ஆன்மாவுக்கு முழு கண்ணியத்துடன் இறுதி அஞ்சலி செலுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராதிகாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் ஒழுங்கின்மை குறித்து அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாக இந்த பதிவு பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam