ராமேஸ்வரம் தனியார் ஓட்டலில் பணிபுரியும் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்
ராமநாதபுரம், 29 ஜூன் (ஹி.ச.) ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்கள் ஏராளமான பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பணி புரியும் தங
Harassment


ராமநாதபுரம், 29 ஜூன் (ஹி.ச.)

ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு இளம்பெண்கள் ஏராளமான பணிபுரிந்து வருகின்றனர்

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பணி புரியும் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் வரவேற்பாளராக பணி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ட்ராவல்ஸ் உரிமையாளர் ராஜா இளம் பெண் பணிபுரியும் ஹோட்டலுக்கு சென்று அவருடைய ட்ராவல்ஸ்சுக்கு வரக்கூடிய யாத்திரீகர்களின் ஜெராக்ஸ் காப்பிகளை கேட்டுள்ளார், இதனை அடுத்து அதனை எடுத்துக் கொடுக்க முற்பட்டபோது இளம்பெண்ணின் பின்னாலிருந்து இடுப்பை கிள்ளியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மன உளைச்சல் அடைந்த இளம் பெண் ஹோட்டல் மேலாளரிடம் தெரிவித்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்று கணவரிடம் கூறியதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து இளம் பெண் தனது கணவருடன் வந்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் செய்தது, மன உளைச்சல் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ட்ராவல்ஸ் உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN