Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யா விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இதையடுத்து, சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் மூலமாக அந்த தகவல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில்,
நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.
அவர் தொடர்ந்து அகரம் அறக்கட்டளை, நற்பணி இயக்கம் உள்ளிட்ட சமூக சேவைகளின் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூர்யா மக்கள் தலைவராக அரசியலுக்கு வருகிறார் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், அவற்றை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் சூர்யாவின் நற்பணி இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam