Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 29 ஜூன் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை அரசின் நிகழ்ச்சிகளையும் பாதித்துள்ளது.
இதன் காரணமாக, கம்மம் மாவட்டம் மதிராவில் இன்று நடைபெற இருந்த முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பங்கேற்க இருந்த ‘ரைத்து ஆஷீர்வாத் சபா’ பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டத்தை ஐதராபாத்தில் உள்ள சில்பகலா வேதிகாவுக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அங்கு ‘ரைத்து பரோசா வழங்கும் மாநாடு’ இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ‘ரைத்து வேதிகா’ மையங்கள் மூலம் காணொலி வசதியில் இந்த நிகழ்ச்சியை நேரலையாகக் காண சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA