தவெக கூட்டணிக் கட்சிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் - தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பு
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை 1-ஆம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட
திருமா


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை 1-ஆம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, இன்று பிற தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் எதிர்கால அரசியல் செயல்திட்டம், கூட்டணி விரிவாக்கம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள சூழலில், இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P