தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச போட்டிகளில் ஆறு பதக்கங்கள் -துளசிமதி முருகேசனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச போட்டிகளில் ஆறு பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ
Udhaya


Jb


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச போட்டிகளில் ஆறு பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தொடர்ச்சியாக இரண்டு சர்வதேசப் போட்டிகளில் ஆறு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பாரா பேட்மிண்டன் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை துளசிமதி முருகேசன் நிகழ்த்தியிருப்பது பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருப்பது அவரது அசாதாரண திறமை, உறுதி மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாகும் என்றும் பாராட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேசப் போட்டியில் துளசிமதி முருகேசனின் சிறப்பான செயல்பாடு, மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டுகளிலும் துளசிமதி முருகேசன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, இந்தியாவுக்கு மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என வாழ்த்துவதாக உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ