Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்குடி, 29 ஜூன் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆனந்தா நகரில் உள்ள ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில், இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் இளைஞரின் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காரைக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம், உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் கொலையாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து காரைக்குடி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், தடயவியல் நிபுணர்களின் உதவியுடனும் குற்றவாளிகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞரின் உறவினர்களை கண்டறிய பொதுமக்களின் உதவியையும் காவல்துறை நாடியுள்ளது.
ஆள்நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே நடந்த இந்த கொடூர கொலை, காரைக்குடி மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b