உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு புகார் – உரிய விசாரணை நடத்த வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அண்மையில் நடத்திய தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி
இபிஎஸ்


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அண்மையில் நடத்திய தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்வில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தேர்வர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சிலருக்கு மதிப்பெண்கள் தெரிந்திருந்ததாகவும், அதனால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது, தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், தேர்வர்களின் நலன் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam