Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச)
சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி அருகே நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை குறிவைத்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டனர்.
தப்பியோட முயன்ற இளைஞரை காவலர்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 5 சவரன் தாலிச் செயினை மீட்ட காவல்துறையினர், கைது செய்யப்பட்ட இளைஞரை வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கைதான இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவருக்கு வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b