ராதாபுரம் தொகுதி 2016 தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றி செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, 03 ஜூன் (ஹி. ச.) நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரையின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை எதிர்த்து திமுக வேட
Inbadurai


சென்னை, 03 ஜூன் (ஹி. ச.)

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரையின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவை எதிர்த்து திமுக வேட்பாளரான எம். அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

வழக்கின் விசாரணையின்போது மேற்கொள்ளப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையில், 104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எம். அப்பாவுவே வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதனையடுத்து, 2016 தேர்தலில் அறிவிக்கப்பட்ட ஐ.எஸ். இன்பதுரையின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், இந்த தீர்ப்பின் அடிப்படையில் இன்பதுரை உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என கருத முடியாது என்றும், அவர் ஏற்கனவே பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த 5 ஆண்டுகளுக்கான முன்னாள் எம்.எல்.ஏ. ஓய்வூதிய பலன்களை கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ராதாபுரம் தொகுதி

தேர்தல் தொடர்பான இந்த தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ