ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ரஷ்யா பயணம்- சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்பு
மாஸ்கோ, 03 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் ரஷ்யாவுக்கு 6 நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாஸ்கோ விமான
A


மாஸ்கோ, 03 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் ரஷ்யாவுக்கு 6 நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அங்குள்ள ஆந்திர வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில்

(SPIEF 2026) நாரா லோகேஷ் பங்கேற்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்க உள்ளார்.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறை துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஜூன் 7-ந்தேதி வரை ரஷ்யாவில் தங்கியிருக்கும் நாரா லோகேஷ், பல்வேறு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடனும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA