சென்னை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை முயற்சி
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) சென்னை மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், அபினந்தம் நகர் பகுதியில் பாலாஜி(35), அவரது மனைவி பிரியா(30), பாலாஜியின் தந்தை சீனிவாசன்(60), தாய் பத்மாவதி(55) ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். நன்மங்கலத்தில் க
தற்கொலை முயற்சி


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

சென்னை மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், அபினந்தம் நகர் பகுதியில் பாலாஜி(35),

அவரது மனைவி பிரியா(30), பாலாஜியின் தந்தை சீனிவாசன்(60), தாய் பத்மாவதி(55)

ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

நன்மங்கலத்தில் காய்கறி கடையை ஒன்ற கடந்த 15 வருடமாக நடத்தி வந்த நிலையில் நேற்றைய முன்தினம் கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வந்ததாக

கூறப்படுகிறது.

நேற்று கடை திறக்கவில்லை என்பதால் காய்கறி கடையில் வேலை செய்யும் அமுதா

என்பவர் மாலை சுமார் 5 மணியளவில் பாலாஜி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது வீட்டில் பாலாஜி, அவரது மனைவி பிரியா, தந்தை சினிவாசன், தாய்

பத்மாவதி ஆகிய நான்கு பேரும் சுயநிணைவின்றி மயக்க நிலையில் இருந்ததை பார்த்து

அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து மயக்க நிலையில் இருந்த நான்கு பேரையும்

மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

நான்கு பேரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் உயிருக்கு ஆபத்து இன்றி அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் மேடவாக்கம் காவல் நிலையத்திற்கு

தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவமனையில்

மயக்கம் நிலை தெளிந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாலாஜி, பிரியா தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆனா நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்துள்ளது.

அதேபோல் காய்கறி கடைக்கு போட்டி அதிகமாக வந்ததால் கடை வியாபாரமும்

எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத கவலையும் நாளுக்கு நாள் அதிகரித்து

வந்துள்ளது.

இதேபோல் சுமார் ஒரு கோடி வரை கடன் பிரச்சனை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி பல பிரச்சனை உள்ள நிலையில் கடந்த ஒன்றாம் தேதி நான்கு பேரும்

கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது தூக்க மாத்திரைகள் வாங்கி

வந்ததாகவும், ஜூஸ்ஸில் 30 தூக்க மாத்திரைகளை கலந்து நான்கு பேரும் குடித்து

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்கள் மயக்க நிலையில் பல மணி நேரம் இருந்துள்ளனர்.

காய்கறி கடை ஊழியர் அமுதா வீட்டிற்கு வந்து பார்க்கவே இவர்களை மீட்டு

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதேபோல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி தாய் தந்தை என நான்கு பேர் தற்கொலை

முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam