Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா இன்று
(03-06-26) தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்கள் இருந்தனர். அவர்களும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் பெரியார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உரு வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.
இந்த 3 தலைவர்களின் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
Hindusthan Samachar / vidya.b