தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் - இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,00
தங்கம்


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ச்சியாக 3வது நாளாகவும் அதே விலைக்கே விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்க விரும்பும் மக்கள் உடனடியாக வாங்கலாம்.

இந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.14,500க்கும், ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,180க்கும், ஒரு சவரன் ரூ.97,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை தொடர்ச்சியாக 5 நாட்களும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P