Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது வீட்டில் நேற்று குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 28 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.45,000 ரொக்கப் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய சரவணகுமார், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பகல் நேரத்தில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து நடக்கும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் மேலூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b