கலைஞர் கருணாநிதிக்கு ராகுல் காந்தி புகழாரம்!
தமிழ்நாடு, 03 ஜூன் (ஹி.ச.) முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக தன
ராகுல் காந்தி


தமிழ்நாடு, 03 ஜூன் (ஹி.ச.)

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் கலைஞர் கருணாநிதி.

ஒவ்வொரு இந்தியரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் மற்றும் திராவிட இயக்க வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam