முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் - முதல்வர் விஜய் மரியாதை
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ம
விஜய்


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam