கொல்கத்தா சுரேந்திரநாத் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்
கொல்கத்தா , 03 ஜூன் (ஹி.ச.) மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சுரேந்திரநாத் கல்லூரியில் பழைய அலமாரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகள், ரகசிய அறை மற்றும் துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
K


கொல்கத்தா , 03 ஜூன் (ஹி.ச.)

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சுரேந்திரநாத் கல்லூரியில் பழைய அலமாரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகள், ரகசிய அறை மற்றும் துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி வளாகத்தை மழைக்காலத்தையொட்டி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது யூனியன் அறையில் இருந்த பழைய அலமாரியை தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது, அதில் இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன. அவற்றை திறந்ததில் ₹100 மற்றும் ₹500 நோட்டுக் கட்டுகள் இருப்பது தெரியவந்தது.

நீண்ட காலமாக பாதுகாப்பின்றி இருந்ததால் அந்த நோட்டுகள் சேதமடைந்து, சில பகுதிகள் அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தின் மதிப்பு ₹1 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதே கல்லூரியில் கட்டிடத்தின் மேல் பகுதிக்குச் செல்லும் வழியில் ஒரு ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த அறை ஏர் கண்டிஷனர், படுக்கை, விலையுயர்ந்த ஓவியங்கள் மற்றும் நவீன குளியலறை வசதிகளுடன் ஒரு சொகுசு அறை போல இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த அறையில் ஒரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால் இதுவரை பணம் மற்றும் ரகசிய அறை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA