வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழக அரசு ஆணை
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்ற
அமைச்சரவை


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்தல், பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு என். ஆனந்த், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறைக்கு பி. வெங்கடரமணன், திருவள்ளூருக்கு ரா. குமார், திருநெல்வேலிக்கு நெ. மரிய வில்சன், பெரம்பலூருக்கு ராஜ்மோகன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காஞ்சிபுரத்திற்கு அ. தென்னரசு, திருப்பத்தூருக்கு ஆர்.வி. இரஞ்சித்குமார், செங்கல்பட்டுக்கு த. சரத்குமார், கள்ளக்குறிச்சிக்கு வன்னி அரசு, இராணிப்பேட்டைக்கு வ. காந்திராஜ், தருமபுரி மற்றும் அரியலூருக்கு ப. ராஜ்குமார், நாகப்பட்டினத்திற்கு ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூருக்கு வினோத், திருச்சிக்கு ரமேஷ், கரூருக்கு சி. விஜயலஷ்மி, நாமக்கல்லுக்கு த. லோகேஷ் தமிழ்செல்வன், திருப்பூருக்கு டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், நீலகிரிக்கு செ. கமலி, வேலூருக்கு ம. விஜய் பாலாஜி, ஈரோட்டுக்கு கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கோவைக்கு வே. சம்பத்குமார் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஆர். நிர்மல்குமார், புதுக்கோட்டைக்கு ஜா. முகமது பர்வேஸ், சிவகங்கைக்கு டாக்டர் டி.கே. பிரபு, கிருஷ்ணகிரிக்கு எஸ். கீர்த்தனா, விருதுநகருக்கு கு. ஜெகதீஸ்வரி, திருவாரூருக்கு பெ. விஸ்வநாதன், தூத்துக்குடிக்கு ஸ்ரீநாத், இராமநாதபுரத்திற்கு பெ. மதன் ராஜா, சேலத்திற்கு ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், கன்னியாகுமரிக்கு செ. ராஜேஷ் குமார், தென்காசிக்கு ராஜீவ் மற்றும் திண்டுக்கல்லுக்கு அ. விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பொறுப்பு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு விரைவாகவும் முழுமையாகவும் சென்றடைவதை கண்காணிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல், மாவட்ட வளர்ச்சிக்கான தேவையான ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட பொறுப்புகளையும் மேற்கொள்ளுமாறு அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam