Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 03 ஜூன் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதியில் இன்று திடீரென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியதால், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரைதட்டி நின்றன.
வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் உள்வாங்கியதால், கடலுக்குள் மறைந்திருந்த அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அமைப்புகள் வெளிப்படையாகக் காணப்பட்டன. இதனை அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
கடல் உள்வாங்கும் இந்த நிகழ்வு காரணமாக, துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடி படகுகள் தரையைத் தொட்டு நின்றன. கடல் நீர் மீண்டும் உயர்ந்து வரும்வரை காத்திருந்து, படகுகளை மீண்டும் மிதக்கச் செய்து கடலுக்குள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடல் உள்வாங்கியதால் மீன்பிடித் தொழிலுக்கு தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடல் நீர் வழக்கமான நிலைக்கு திரும்பும் வரை மீன்பிடிக்கச் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P