சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ரூ.50,000 திருட முயற்சி - பெண்ணுக்கு தர்ம அடி
கள்ளக்குறிச்சி, 03 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜாவின் மனைவி சந்திரா, தனது சொந்த நிலத்தில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். அறுவடை செய்யப்பட்ட பருத்தி விற்பனை தொடர்பான பண
Sankarapuram Police Station


கள்ளக்குறிச்சி, 03 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம்

சங்கராபுரம் அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜாவின் மனைவி சந்திரா, தனது சொந்த நிலத்தில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார்.

அறுவடை செய்யப்பட்ட பருத்தி விற்பனை தொடர்பான பணமாக ரூ.50 ஆயிரத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, சென்னை பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண், சந்திராவிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த சந்திரா சத்தம் எழுப்பியதையடுத்து, அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த பெண்ணை பிடித்தனர்.

பின்னர் அவரை சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN