Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 03 ஜூன் (ஹி.ச)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள
அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி - கண்ணகி தம்பதியினர் தங்களது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்தனர். அறுவடைக்கு தயாரான பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது கண்ணகி, மக்காச்சோள மூட்டையை அறுவடை இயந்திரம் அருகே கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அச்சமயம் எதிர்பாராத விதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறி இயந்திரத்தில் இழுக்கப்பட்ட கண்ணகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கண்ணகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாய பணியின் போது நிகழ்ந்த இந்த துயர சம்பவம் அரசம்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN