கோடை விடுமுறை நெரிசலை சமாளிக்க திருவனந்தபுரம் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கம்
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் போத்தனூர் இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையானது இரு மார்க்கங்களி
Special Train Service Operated Between Thiruvananthapuram and Podanur


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் போத்தனூர் இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இந்த சிறப்பு ரயில் சேவையானது இரு மார்க்கங்களிலும் இரண்டு நாட்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து போத்தனூருக்கு இன்று (ஜூன் 3-ஆம் தேதி) மற்றும் வரும் ஜூன் 10-ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 1.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (ஜூன் 4-ஆம் தேதி) மற்றும் ஜூன் 11-ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

போத்தனூரில் இருந்து மாலை 5.00 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும்.

கோடைகாலத்தில் கேரளா மற்றும் தமிழகம் இடையே பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு விவரங்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில் நிலையங்களை அணுகலாம் என்றும் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b