Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை ,03 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் அமைந்துள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் தலை மற்றும் கழுத்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மறு வாழ்வு சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் “காம்ப்ரஹென்சிவ் வாய்ஸ், ஏர்வே அண்ட் ஸ்வாலோ கிளினிக் ( சி-விஏஎஸ்சி) என்ற புதிய சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது.
இந்த மையம் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய நிலையில் ஏற்படும் குரல் மாற்றம், விழுங்குதல் சிரமம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு முழுமையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் தெரிவித்ததாவது,
இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில்,
சிகிச்சை முடிந்த பிறகும் நோயாளிகள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனரீதியான சிக்கல்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வு வழங்கும் நோக்கில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பேச்சு சிகிச்சை நிபுணர்கள், விழுங்குதல் குறைபாடு நிபுணர்கள், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நுரையீரல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்துறை மருத்துவர்கள் இணைந்து இம்மையத்தில் சேவை வழங்க உள்ளனர்.
மேலும், லாரிஞ்சியல் ஸ்ட்ரோபோஸ்கோபி, எஃப்இ இஎஸ் போன்ற அதிநவீன பரிசோதனை வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
பாடகர்கள், ஆர் ஜே மற்றும் வி.ஜே-க்கள், டப்பிங் கலைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள் உள்ளிட்ட குரல் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கும் இந்த மையம் சிறப்பு கவனம் வழங்கும், என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது,
புற்று நோய் சிகிச்சை மட்டும் அல்லாது, நோயாளிகள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் பேசவும், உணவருந்தவும், சுவாசிக்கவும் முடியும் வகையில் முழுமையான வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுப்பதே இம்மையத்தின் முக்கிய நோக்கம்.
தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், சென்னையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாக அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA