Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா , 03 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறிய கருத்துகளுக்கு தெலங்கானா மாநில பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் (கேடிஆர்) கடுமையாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தெலங்கானா என்பது இங்கு வாழும் நான்கு கோடி மக்களின் நிலம். இங்கு யார் வேண்டுமானாலும் வந்து அரசியலில் போட்டியிடலாம்.
அதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால், மாநில செயலகம் உள்ளிட்ட நிர்வாகத்தில் வெளியிலிருந்து வந்து ஆதிக்கம் செலுத்த முயன்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
பவன் கல்யாண் “பிராந்தியவாதம் என்பது தீவிரவாதத்தைவிட ஆபத்தானது” என்று கூறியதையும் கேடிஆர் விமர்சித்தார்.
தெலங்கானா உருவாக்கப் போராட்டம் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டி, பிராந்திய உணர்வுகளை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசை மறைமுகமாக குற்றம் சாட்டிய அவர், தெலங்கானாவுக்கு வரவேண்டிய தொழில்துறை முதலீடுகள் சில குஜராத்துக்கு மாற்றப்படுவதாகவும், இதை “பொருளாதார பிராந்தியவாதம்” எனவும் குறிப்பிட்டார்.
இறுதியாக, பவன் கல்யாணை துணை முதல்வராக மதிப்பதாகவும், நடிகராகவும் மனிதராகவும் மதிப்பதாகவும் கூறிய கேடிஆர், “அவர் தெலங்கானாவுக்கு வரலாம், அரசியலில் போட்டியிடலாம்.
ஆனால் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முயன்றால் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்று எச்சரித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA