Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 03 ஜூன் (ஹி.ச)
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 25 வது மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார், அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்களின் மின்னஞ்சலுக்கு மாவோயிஸ்ட் என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது, இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் தென்றல் உதவியுடன் 10 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் வீடு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் அறை, குறிப்பாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்து இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியராக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர் தனது குடும்பத்துடன் அரசு மாளிகையில் தனது குடும்பத்துடன் தங்கி இருக்கும் நிலையில் இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றும் வரும் இந்த சோதனையில் இதுவரை எந்த தடையமும் கிடைக்கவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கும் சூழலிலும் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பணியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN