மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கரூர், 03 ஜூன் (ஹி.ச.) கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணைக்கு கதவணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,20
Water Inflow to Mayanur Barrage Increases


கரூர், 03 ஜூன் (ஹி.ச.)

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணைக்கு கதவணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,205 கன அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் முழு அளவும் தற்போது மீண்டும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அதன்படி, மாயனூர் கதவணையில் இருந்து வினாடிக்கு 4,205 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, பரிசல் இயக்கவோ வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கும் இந்த நீர் திறப்பு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b