Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள புதிய ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எந்தவிதமான தாமதமும் இருக்கக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ரயில்வே துறைக்கு தேவையான நில ஒதுக்கீட்டுப் பணிகளை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக போக்குவரத்து, வருவாய், நெடுஞ்சாலை மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய நான்கு முக்கிய துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு தெளிவான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறைபாடு காரணமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமாவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலத்தில் 75 சதவீதம் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த சூழலில், திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றும் வகையில், நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட மாநில அரசு தற்போது முனைப்பு காட்டி வருகிறது.
தாமதங்களை தவிர்த்து, உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b