திருவள்ளூரில் மரத்தில் பைக் மோதி விபத்து - இரு இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்
திருவள்ளூர், 30 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் இன்று பயணம் செய்துள்ளனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந
திருவள்ளூரில் மரத்தில் பைக் மோதி விபத்து - இரு இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்


திருவள்ளூர், 30 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் இன்று பயணம் செய்துள்ளனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மதன்

(வயது 20), தேவா (வயது 18) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடன் பயணித்த ஜெகதீசன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அதிவேகம் மற்றும் மூன்று பேர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளை மீறி அதிவேகமாகவும், அளவுக்கு அதிகமான நபர்களுடனும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b