அமோனியா வாயு கசிவு எதிரொலி -அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 62 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தில் லேசான பாதிப்பு
Ass


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தில் லேசான பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்கு மருத்துவமனைகளில் முதலுதவி மற்றும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நலம் தேறிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் என மொத்தம் 62 தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் சில்காட் டவுன் நோக்கி செல்லும் வாராந்திர நாகோன் சிறப்பு ரயிலில் தனிப்பெட்டி முன்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்களின் உடல்நிலை குறித்தும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ