Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 30 ஜூன் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் இலவச சர்வதரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரே நாளில் 95 ஆயிரத்து 498 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியே 63 லட்சமாக பதிவானது. அதேபோல், 30 ஆயிரத்து 231 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
மேலும், 4 லட்சத்து 34 ஆயிரம் லட்டுகள் விற்பனையானதாகவும், 2 லட்சத்து 58 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவ சேவைகளை 3 ஆயிரத்து 172 பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு வெளியே சிலாதோரணம் வரை வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA