Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜூன் (ஹி.ச.)
அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் சுசி.கலையரசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மனு வழங்கினார்கள்.
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா காடம்பாடி பஞ்சாயத்து குமாரபாளையம் கிராமத்தில் சுமார் 100 மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து, சூலூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட பொறுப்பாளர் அசோக் மணிமாறன், சூலூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் மனு அளித்தனர்.
அப்போது காளியம்மாள், சாந்தாமணி, அமுதா, ஆராத்தால், தங்கவேல், சரவணன், சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN