Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)
சென்னை அடையாறு - பெசன்ட் நகர் சாலைகளில் சாலை தடுப்பை (பேரிகார்டு) இழுத்துச் சென்று ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 5 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
ஜாலிக்காகவே இந்த செயலில் ஈடுபட்டோம் என்று அவர்கள் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தவும், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் சிறார்களை ஈடுபட விடக்கூடாது என எச்சரிக்கை வழங்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களின் உயிருக்கும், போக்குவரத்து பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் வகையில் சாலை தடுப்புகளை இழுத்துச் சென்று சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P