கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, 30 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், வடக்கு கடலோர தமிழ
மழை


தமிழ்நாடு, 30 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில்,

வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தைப் பொருத்தவரை, திருத்தணி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நேற்று 7 இடங்களில் வெயில் சதமடித்தது.

அதிகபட்சமாக கடலூர் மற்றும் வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் பதிவான நிலையில், சென்னையில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டியது.

சென்னையைப் பொருத்தவரை இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P