Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 ஜூன் (ஹி.ச.)
வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் (Paul Berg) 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.
நியுக்ளிக் அமிலங்களின் (nucleic acids) உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ. தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபேலோ, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளை ஆய்வகத்தில் ஒன்றாக இணைத்து புதிய கலப்பின டிஎன்ஏ-வை (Hybrid DNA) முதன்முதலில் உருவாக்கியவர் இவரே.
இந்த கண்டுபிடிப்பே பிற்காலத்தில் இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்துகளை பாக்டீரியாக்கள் மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யும் நவீன மரபணு பொறியியல் (Genetic Engineering) மற்றும் பயோடெக்னாலஜி துறை உருவாகக் காரணமாக அமைந்தது.
புரதச் சேர்க்கையில் (Protein Synthesis) முக்கியப் பங்கு வகிக்கும் இடமாற்ற ஆர்என்ஏ (transfer RNA) குறித்த ஆரம்பகால ஆய்வுகளையும் இவர் மேற்கொண்டார்.
மரபணுக்களை மாற்றி அமைப்பதில் இருக்கும் உயிரியல் அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விவாதிக்க, 1975 இல் வரலாற்றுச் சிறப்புமிக்க அசிலோமர் மாநாட்டை முன்னின்று நடத்தினார்.
இதன் மூலம் அறிவியல் சோதனைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க உதவினார்.
வேதியியலுக்கான நோபல் பரிசு (1980) – இதை வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரடெரிக் சாங்கர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்காவின் உயரிய விருதான 'National Medal of Science' (1983).
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் உயிர்வேதியியல் பேராசிரியராகவும், பெக்மேன் மூலக்கூறு மற்றும் மரபணு மருத்துவ மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கியவர். இவர் 2023ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J