அதிரடியாக சரிந்தது தங்கம் விலை- நகை பிரியர்கள் உற்சாகம்..!
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த ஜூன் 24, 25ஆம் தேதிகளில் அதிரடியாக சரிந்து நகை பிரியர்களிடையே மகிழ்
தங்கம்


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த ஜூன் 24, 25ஆம் தேதிகளில் அதிரடியாக சரிந்து நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை அளித்தது.

தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,030க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P