இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி அறிவிப்பு
புதுடெல்லி , 30 ஜூன் (ஹி.ச.) 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்தப் போட்டியில் பேட்மிண்டன், டென்னிஸ், குத்துச்சண்டை, ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக
A


புதுடெல்லி , 30 ஜூன் (ஹி.ச.)

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்தப் போட்டியில் பேட்மிண்டன், டென்னிஸ், குத்துச்சண்டை, ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் டி20 கிரிக்கெட்டும் இடம்பெற்றுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், கமலினி, பார்தி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா சிங், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பட்டீல், ராதா யாதவ், நந்தினி காஷ்யப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக, ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியையும் பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி மீண்டும் தங்கப் பதக்கத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA