கோத்தகிரி அருகே குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி - கிராம மக்கள் அச்சம்
நீலகிரி, 30 ஜூன் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில், குட்டிகளுடன் பெரிய கரடி ஒன்று பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி மற்றும் அத
கரடி


நீலகிரி, 30 ஜூன் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில், குட்டிகளுடன் பெரிய கரடி ஒன்று பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல், இரவு என எந்த நேரத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடிகள் நுழைந்து வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கோத்தகிரியில் இருந்து கன்னிகா தேவி காலனி செல்லும் சாலையில், குட்டிகளுடன் பெரிய கரடி ஒன்று குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உலா வந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்ததுடன், அந்தக் காட்சியை செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் நடமாடுவதால் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, அடிக்கடி கிராமங்களுக்குள் வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam