கோவை அன்னூரில் ஒரே நாளில் 6 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு – சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை
கோவை, 30 ஜூன் (ஹி.ச.) கோவை மாவட்டம் அன்னூர் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமத்தம்பட்டி சாலை, கோவை சாலை, கரியாம்பாளையம் மற்றும் குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பேக்கரிகள், மளிகைக் கடைகள் மற்றும் ஒரு பைனான்ஸ் அலுவலகம் உள்ளி
திருட்டு


கோவை, 30 ஜூன் (ஹி.ச.)

கோவை மாவட்டம் அன்னூர்

அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமத்தம்பட்டி சாலை, கோவை சாலை, கரியாம்பாளையம் மற்றும் குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பேக்கரிகள், மளிகைக் கடைகள் மற்றும் ஒரு பைனான்ஸ் அலுவலகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்த திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கள்ளாப் பெட்டிகளில் இருந்த ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மொத்தமாக சுமார் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலையோரங்களில் அமைந்துள்ள கடைகளையே குறிவைத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மிகவும் நிதானமாக இந்த கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை கடைகளைத் திறந்த உரிமையாளர்கள் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதையும், பணம் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து ஆறு இடங்களில் நடைபெற்ற இந்த தொடர் திருட்டுச் சம்பவம் அன்னூர் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam